மன்னாரில் காணமால்போன மாணவன்: பெற்றோர் விடுத்துள்ள கோரிக்கை
மன்னார் - நானாட்டான் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட அச்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் 17 வயதுடைய மாணவரொருவரை காணவில்லை என காவல்துறையில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த முறைப்பாடானது, காணாமல் போன மாணவனின் பெற்றோரால் முருங்கன் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவனின் அடையாளம்
மாணவன் நேற்று(10) மதியம் அச்சங்குளம் கிராமத்தில் உள்ள வீட்டில் இருந்து வெளியில் சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை என பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, அச்சங்குளம் கிராமத்தில் வசிக்கும் சந்திரசேகர் நிலோஜ் ரோக்க்ஷன் என்ற 17 வயதுடைய மாணவர் ஒருவரே காணாமல் போயுள்ளார்.
முறைப்பாடு
மேலும், இந்த மாணவன் தொடர்பான தகவல்கள் ஏதும் கிடைக்கப் பெற்றால் 0774722506 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளுமாறும் பெற்றோர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அதேவேளை, மாணவன் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        