திடீர் சுகயீனம் காரணமாக 18 மாணவர்கள் வைத்தியசாலையில்
Sri Lankan Schools
By Kathirpriya
வெல்லவாய, மல்வத்தாவல பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 18 மாணவர்கள் திடீர் சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் இன்று புதன்கிழமை (14) காலை இடம்பெற்றுள்ளது.
குறித்த பாடசாலையில் 5 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களே இவ்வாறு திடீர் சுகயீனமடைந்துள்ளனர்.
18 மாணவர்கள் தோல் அரிப்பு மற்றும் உடலில் தழும்புகள் ஏற்பட்டு சுகயீனமடைந்துள்ளனர்.
இதனையடுத்து சுயீனமடைந்த மாணவர்கள் வெல்லவாய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக செய்திகளை இன்றைய மாலை நேர செய்தித் தொகுப்பில் காண்க.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
3 நாட்கள் முன்போரின் அகக் காயங்களுடன் வாழும் மாற்றுத்திறனாளிகள் !
1 வாரம் முன்
மரண அறிவித்தல்