கொழும்பில் வடிகாலில் கண்டெடுக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கடவுச்சீட்டுக்கள்
கொழும்பு(colombo)- மஹரகம(maharagama) பிரதேசத்தில் இயங்கி வரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றிற்கு கையளிக்கப்பட்ட 180 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள்(passport) பையில் வைத்து வடிகாலில் வீசப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மஹரகம பிரதேசத்தில் மூடப்பட்டுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்திடம் வழங்கப்பட்ட கடவுச்சீட்டுகளே சாக்கடையில் வீசப்பட்டுள்ளன.
25 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணம் மோசடி
அத்துடன் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி 25 கோடி ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.
வாய்க்காலில் காணப்பட்ட கடவுச்சீட்டுகள்
வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்த சிரேஷ்ட காவல்துறை அதிகாரி, வாய்க்காலில் காணப்பட்ட கடவுச்சீட்டுகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |