யாழ்.போதனாவில் உயிரிழந்த தந்தை! மகன் காவல்துறையில் முறைப்பாடு
காது வலி என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் உயிரிழந்த நிலையில், வைத்தியர்களின் தவறால் உயிரிழப்பு சம்பவித்ததாக யாழ். காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சூராவத்தை சுன்னாகத் தைச் சேர்ந்த வீரசிங்கம் அம்பிகைபாகன் (வயது-68) என்பவர் கடந்த 23ஆம் திகதி காது வலி காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் கண், காது, தொண்டை (E.N.T) சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மரண விசாரணை
பின்னர் 41ஆம் விடுதிக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு வெள்ளிக்கிழமை (06) உயிரிழந்துள்ளார்.

இந்த நிலையில், தந்தையின் மரணம் வைத்தியர்களின் தவறே எனத் தெரிவித்து மகன் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறையிட்டுள்ளார்.
மரணம் தொடர்பில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி அன்ரலா வின்சன்தயான் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்... |