மெக்சிகோவில் பற்றியெரிந்த 6 வாகனங்கள்!! 19 பேர் பலி
mexico
road accident
19 dead
By Vanan
மத்திய மெக்சிகோவில் நெடுஞ்சாலை ஒன்றில் பாரவூர்தி ஒன்று ஆறு வாகனங்கள் மீது மோதியதில் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.
நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடி அருகே இடம்பெற்ற இந்த விபத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விபத்தை அடுத்து பல வாகனங்கள் தீப்பற்றி எரிந்ததாகவும் சில வானங்கள் முற்றாக தீக்கிரையானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆறு வாகனங்களில் பயணித்தவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.