ஒமைக்ரோன் பாதிப்பினால் அமெரிக்காவில் முதல் பலி!
அமெரிக்காவில், ஒமைக்ரோன் பாதித்து சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதன் மூலம் ஒமைக்ரோன் பாதிப்பினால் அமெரிக்காவில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தைச் சேர்ந்த தடுப்பூசி செலுத்தாத நபர் உயிரிழந்துள்ளார். அவருக்கு 50 முதல் 60 வயதுக்குள் இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
கவுன்டி நீதிபதி லீனா ஹிடால்கோ தனது டுவிட்டர் பக்கத்தில், "ஒமைக்ரோன் தொற்றால் பலியான முதல் உள்ளூர்வாசி. தயவுசெய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். முன்னரே தடுப்பூசி செலுத்தியவர்கள் பூஸ்டர் டோஸ் போடுங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் 18 ஆம் திகதியன்று அமெரிக்காவின் நோய்தடுப்பு மற்றும் பாதுகாப்பு மையம் (சிடிசி) வெளியிட்ட அறிக்கையின்படி 73% பேர் ஒமைக்ரோனால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ளது.
Sad to report the first local fatality from the Omicron variant of COVID-19. A man in his 50’s from the eastern portion of Harris County who was not vaccinated. Please - get vaccinated and boosted.
— Lina Hidalgo (@LinaHidalgoTX) December 20, 2021