2300 பட்டதாரி ஆசிரியர்களின் நியமனம் தொடர்பில் வெளியான புதிய தகவல்
எதிர்வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் 2,300 பட்டதாரி ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
பாடசாலையொன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அந்தப் பட்டதாரிகள் அனைவரும் பரீட்சை முடிந்த பின்னர் நேர்முகத் தேர்வுக்குத் தோற்றியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
டிஜிட்டல் கல்வி
அத்துடன், இரசாயனவியல், பௌதீகவியல், உயிரியல், சிங்களம், ஆங்கிலம், தமிழ் ஊடகம் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் வெளிநாட்டு மொழிகளிலும் பட்டதாரிகளுக்கு இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கல்வியை டிஜிட்டல் மயமாக்குவது கரும்பலகையில் இருந்து பெரிய திரைக்கு மாறுவது மட்டுமல்ல என்று குறிப்பிட்ட அமைச்சர், எதிர்வரும் ஓகஸ்ட் - செப்டெம்பர் மாதத்திற்குள் பாடசாலைகளுக்கு 2500 அதிநவீன 'ஸ்மார்ட் பலகைகள்' வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |