மின்சார வாகன அனுமதிப் பத்திரத்தில் முறைகேடு : அம்பலமான உண்மை

Parliament of Sri Lanka Sri Lanka vehicle imports sri lanka
By Sathangani Apr 04, 2025 11:24 AM GMT
Report

வெளிநாட்டு பணப்பரிமாற்றங்களின் அடிப்படையில் வெளிநாட்டு பணிபுரியும் இலங்கையர்களுக்கு முழு மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை நாடாளுமன்றத்தின் அரசாங்கக் கணக்குகள் பற்றிய கோபா (COPA) குழுவின் விசாரணையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கோபா குழுவின் விசாரணையின் போது, அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டதில் பண மோசடி நடந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாக தணிக்கை அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்னிலங்கை சிறைச்சாலையில் தமிழ்க் கைதி ஒருவர் படுகொலை

தென்னிலங்கை சிறைச்சாலையில் தமிழ்க் கைதி ஒருவர் படுகொலை

 சொகுசு வாகன வரி 

2024 செப்டம்பர் 30 வரை இறக்குமதி செய்யப்பட்ட 921 வாகனங்களுக்கு சொகுசு வாகன வரி விலக்கு உயர்த்தப்பட்டதன் காரணமாக, அரசாங்கத்திற்கு 2.42 பில்லியன் ரூபா வரி வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மின்சார வாகன அனுமதிப் பத்திரத்தில் முறைகேடு : அம்பலமான உண்மை | 2 4 Bill Loss By Import Electric Vehicles Permits

மேலும், இரண்டு முக்கிய நிறுவனங்கள் 640 அனுமதிப்பத்திர பெறுநர்களுக்கு வசதிகளை வழங்கிய இறக்குமதியாளர்களாக செயற்பட்டுள்ளதாகவும் இதன்போது தெரியவந்துள்ளது.

கோபா குழுவில் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

2025 இல் இலங்கைக்கு படையெடுத்த இலட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள்

2025 இல் இலங்கைக்கு படையெடுத்த இலட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள்

கோபா குழு அறிவிப்பு

குறித்த வெளிப்படுத்தலின் படி, அனுமதிப் பத்திரங்கள் வழங்கும் போர்வையில் வியாபாரம் ஒன்று நடந்துள்ளதாக கோபா குழுவிற்கு தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

மின்சார வாகன அனுமதிப் பத்திரத்தில் முறைகேடு : அம்பலமான உண்மை | 2 4 Bill Loss By Import Electric Vehicles Permits

குறிப்பிட்ட காலகட்டத்தில் வெளிநாடுகளுக்குச் செல்லாத நான்கு நபர்களுக்கு மின்சார வாகன அனுமதிப்பத்திரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

முன்னாள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர், முன்னாள் அமைச்சரின் வேண்டுகோளின் பேரில் இவை அனைத்தையும் செய்ததாக கோபா குழுவில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மோடியின் வருகைக்கு காத்திருக்கும் சுமந்திரன் : ஆராயப்படவுள்ள விடயங்கள்

மோடியின் வருகைக்கு காத்திருக்கும் சுமந்திரன் : ஆராயப்படவுள்ள விடயங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

Atchuvely, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்