2025 இல் இலங்கைக்கு படையெடுத்த இலட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள்
2025 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 722,276 சுற்றுலாப்பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயம் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (Sri Lanka Tourism Development Authority) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த மார்ச் மாதத்தில் மாத்திரம் 229,298 சுற்றுலாப்பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதிக சுற்றுலாப்பயணிகள்
அவர்களில் அதிகளவானோர் இந்தியாவில் (India) இருந்து வந்ததுடன் அந்த எண்ணிக்கை 39,212 ஆகும்.
அத்துடன், ரஷ்யாவில் இருந்து 29, 177 சுற்றுலாப்பயணிகளும், பிரித்தானியாவில் இருந்து 22,447 சுற்றுலாப்பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 17, 918 சுற்றுலாப்பயணிகளும் இலங்கைக்கு வந்துள்ளனர்.
இதனிடையே, சீனா, அவுஸ்திரேலியா ,போர்த்துக்கல் போன்ற நாடுகளில் இருந்தும் அதிகளவான சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகை தந்ததாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
3 நாட்கள் முன்