2.5 மில்லியன் நிதி மோசடி... சிஐடியின் நடவடிக்கை : ஐவருக்கு விதிக்கப்பட்ட தடை
அரச திறைசேரிக்குச் சொந்தமான 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி, குறித்த விவகாரம் தொர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (28) நீதிமன்றத்தில் ஆதாரங்களைச் சமர்ப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பாரிய நிதி மோசடி தொடர்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் ஒரு கட்டமாக, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஐந்து அரச அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
அரசாங்க நிதி பற்றிய குழு
இதேவேளை அரச திறைசேரியிலிருந்து வெளித்தரப்பு ஒன்றினால் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக, அரசாங்க நிதி பற்றிய குழு இன்று (28) நாடாளுமன்றத்தில் கூடவுள்ளது.

அதற்கமைய, இந்த மோசடி தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக, நிதி அமைச்சின் செயலாளரை குழுவின் முன்னிலையில் அழைப்பதா என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக ஹர்ஷ டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |