பல மில்லியன் ரூபா பெறுமதியான தங்கத்துடன் கட்டுநாயக்கவில் சி்க்கிய இருவர்
நாட்டிற்குள் சட்டவிரோதமாக 6.7 கிலோகிராம் தங்கத்தை கடத்திவர முயன்ற இருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்கள (CID)அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேகநபர்கள் 26 மற்றும் 46 வயதுடைய கிராண்ட்பாஸ் மற்றும் கண்டியைச் சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்.
6.7 கிலோகிராம் தங்கம்
இந்தநிலையில் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மொத்த பெறுமதி சுமார் 210 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இருவரும் நேற்று (15) டுபாயில் (Dubai) இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK-650 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தினை வந்தடைந்தனர்.
சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின் போது, பொருட்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6.7 கிலோகிராம் எடையுள்ள 21 தங்க பிஸ்கட்களை கண்டுபிடித்தனர்.
சந்தேக நபர்கள் இன்று அதிகாலை, மீட்கப்பட்ட தங்கத்துடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள இலங்கை சுங்க அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
