யாழில் பௌர்ணமி தினத்தில் மதுபான விற்பனை : இருவர் அதிரடி கைது
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Theepan
யாழ்ப்பாணத்தில் பௌர்ணமி தினமான நேற்று (26) மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த விற்பனை நிலையத்தில் இருந்து பெருந்தொகையான மதுபானத்தை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
சாவகச்சேரி காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் பௌர்ணமி தினத்தில் மதுபான விற்பனை நடைபெறுவதாக காவல்துறை விசேட புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் மதுபான விற்பனையில் ஈடுபட்டிருந்த இருவரையும் கைது செய்தனர்.
நல்லூரில் வைக்கப்பட்ட திலீபனின் திருவுருவச்சிலை அகற்றம்.... பின்னணியில் சி.வி.கே : எழுந்துள்ள குற்றச்சாட்டு
சாவகச்சேரி காவல்துறையினரிடம் ஒப்படைப்பு
இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 5,000 லீற்றர் சாராயம் மற்றும் 2,500 லீற்றர் பியர் ஆகியவற்றை காவல்துறையினர் கைப்பற்றியிருந்தனர்.

இதனையடுத்து கைப்பற்றப்பட்ட மதுபானங்களும், கைது செய்யப்பட்ட இருவரும் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக சாவகச்சேரி காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |