இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணியில் வெடிகுண்டுகள் : 6 பேர் கைது!
Army
Bombs
Puthukkudiyiruppu
Land liberated
By MKkamshan
புதுக்குடியிருப்பில் போரின் போது கைவிடப்பட்ட இரண்டு வெடிகுண்டுகளை இரும்பிற்கு விற்பனை செய்ய கொண்டு சென்ற 6 பேரை கைது செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
புதுக்குடியிருப்பில் இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்ட காணியில் இருந்தே குறித்த வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறையினரின் ஆரம்ப கட்ட விசாரணையில், கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட சுமார் 400 கிலோகிராம் எடைகொண்ட இரண்டு வெடிகுண்டுகளையும் சந்தேகநபர்கள் விற்பனை செய்வதற்காக எடுத்து சென்றமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்கள் கைவேலி, புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களை இன்று மாங்குளம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி