யாழ். மானிப்பாயில் அதிரடியாக கைது செய்யப்பட்ட இளைஞர்கள்
Sri Lanka Police
Jaffna
Sri Lanka Police Investigation
By Thulsi
மானிப்பாய் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில், ஐஸ் போதைப்பொருளுடன் 26 வயதுடைய இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை மானிப்பாய் பகுதியில் நேற்று (20) நள்ளிரவு விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்டவர்களில் தெல்லிப்பழையைச் சேர்ந்த இளைஞரிடமிருந்து 69 கிராம் ஐஸ் போதைப்பொருளும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞரிடமிருந்து 01 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, சந்தேகநபர்கள் பயன்படுத்திய முச்சக்கரவண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இருவரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் முச்சக்கரவண்டியுடன் மேலதிக விசாரணைகளுக்காக மானிப்பாய் காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
4ம் ஆண்டு நினைவஞ்சலி