யாழில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இருவர் மாயம் : தொடரும் தேடுதல் பணிகள்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) இருந்து மீன்பிடிக்க சென்ற இரண்டு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் ஜே.சுதாகரன் (J.Suthaagaran) தெரிவித்துள்ளார்.
இது குறித்து கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்திற்கு (Department of Fisheries and Aquatic Resources) அவர் இன்று (17) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
ஊர்காவற்துறையில் இருந்து சென்றவர்கள்
அந்தக் கடிதத்தில், 'தோமஸ் டக்ளஸின் படகில் இரண்டு கடற்றொழிலாளர்கள் நேற்று முன்தினம் (15.03.2025) மாலை 3.00 மணிக்கு ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் இறங்கு தளத்தில் இருந்து IDAY-A-0035 JFN நீலம் மற்றும் வெள்ளை நிற படகில் மீன்பிடிக்கச் சென்றனர்.
ஆனால் குறித்த இருவரில் யாரும் இன்னும் கடற்கரைக்கு திரும்பவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 46 வயதான விமலேந்திரன் ஞானராஜ் மற்றும் 54 வயதான லிகோரி பூலோகதாசன் ஆகிய இருவருமே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
மேலும் காணாமல் போன கடற்றொழிலாளர்களை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் பு. கஜிந்தன்
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



நெருக்கடி நிலைமைகளும் மலையகத் தமிழர்களும்
1 வாரம் முன்