2 போர் விமானங்கள் நடுவானில் மோதி விபத்து (காணொளி)
இரண்டு இத்தாலிய விமானப்படை விமானங்கள் நடுவானில் மோதியதில் அதன் விமானிகள் இருவரும் உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு U-208 இத்தாலிய விமானப்படை விமானங்கள் ரோம் நகரின் வடமேற்கே பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருக்கும் போது ஒன்றுக்கு ஒன்று மோதி விபத்திற்குள்ளானது.
அதில் விமானங்களில் ஒன்று வயலில் விழுந்ததாகவும், மற்றொன்று சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த கார் மீது விழுந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
விமானிகள் உயிரிழப்பு
விபத்தில் அதன் விமானிகள் இரண்டு பேரும் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உயிரிழந்த விமானிகளின் குடும்பத்தினருக்கும் சக ஊழியர்களும் இரங்கலை தெரிவித்துள்ளார்.
அத்துடன் மோதியதற்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்று விமானப்படை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
? #ÚltimaHora: dos aviones militares #U208 han colisionado en el aire cerca del aeropuerto de Guidonia, al este de Roma. Al parecer estos aviones, pertenecientes al ala 60 de la Fuerza Aerea Italiana, estaban participando en un entrenamiento programado. Ambos aviones han caído… https://t.co/Z8I6xwDtfL pic.twitter.com/rJa7dlBQdr
— On The Wings of Aviation (@OnAviation) March 7, 2023
U-208 ஒரு இலகுரக ஒற்றை-இயந்திரம் கொண்ட விமானமாகும், 285 கிமீ வேகத்துடன் பறக்க கூடிய இந்த விமானம் நான்கு பயணிகளையும், மேலும் விமானியையும் ஏற்றிச் செல்லக்கூடியது.
