அமெரிக்காவை உலுக்கிய துப்பாக்கி சூடு தாக்குதல்
அமெரிக்காவில் (United States) துப்பாக்கி சூடு தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
வடக்கு கரோலினாவின் தென்கிழக்கே உள்ள மேக்ஸ்டன் என்ற இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
வார விடுமுறை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இடத்தில் வார விடுமுறை கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவமனையில் அனுமதி
சம்பவத்தில் 13 பேரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட நிலையில், இரண்டு பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர்.

இதையடுத்து, பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறையினர் விசாரணை
சம்பவம் நடந்ததும் 150 இற்கும் மேற்பட்டோர் அஞ்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச்சூடு நடத்தியது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
ஈழ விவகாரத்தில் கடமை தவறிய ஐ.நா! 2 நாட்கள் முன்