இராணுவத்தில் பணியாற்றியவர் உட்பட இருவரை கைது செய்த குற்றப் புலனாய்வுப் பிரிவு
arrest
police
sri lanka
By Shalini
சீதுவ பகுதியில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து, போலி நாணயத்தாள்களை அச்சிட்டதாகக் கூறப்படும் இரண்டு நபர்கள் பல நாணயத்தாள்களுடன் கைது செய்யப்பட்டதாக கம்பஹா பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவு கூறுகிறது.
இவர்களில் ஒரு சந்தேகநபர் சில காலம் இராணுவத்தில் பணியாற்றியதாக பொலிஸார் கூறுகின்றனர்.
குறித்த சந்தேகநபர்கள் வெல்லம்பிட்டி மற்றும் பெதியாகொட பகுதிகளில் வசிப்பவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
சந்தேகநபர்கள் ரூ .5000, 1000, 100 மற்றும் 50 நாணயத்தாள்களை மோசடி செய்து கடைகளுக்கு கொடுத்து பொருட்களை வாங்கியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உடுகம்பொலவில் உள்ள கல்பொத்த பகுதியில் இரண்டு சந்தேக நபர்களைத் தேடியபோது இவர்கள் கைது செய்யப்பட்டதாக கம்பஹா பிரதேச குற்றப் புலனாய்வு பிரிவு தெரிவித்துள்ளது.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்