2024 இறுதிக்குள் இலங்கை வரவுள்ள 2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள்
இந்த வருட இறுதிக்குள் 2 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தருவார்கள் என்ற இலக்கு நிறைவேறும் என தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை (Sri Lanka Tourism Development Authority) தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் அறுகம் குடா பகுதிக்கு (Arugam Bay) விடுக்கப்பட்டிருந்த தாக்குதல் எச்சரிக்கையைத் தொடர்ந்தும் இஸ்ரேலிய (Israel) சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்திருந்தது.
பயண ஆலோசனை
அத்துடன் குறித்த எச்சரிக்கையைத் தொடர்ந்து பல நாடுகள் இலங்கைக்கான பயண ஆலோசனையைப் புதுப்பித்திருந்தன.

இந்த நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்கான பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
எனினும், ஒப்பீட்டளவில் இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டுக்கு வருகைதந்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகச் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வருடத்தின் ஜனவரி 1 தொடக்கம் நவம்பர் 10ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1,682,482 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! | 
 
    
                                 
        
        காரைநகர் படகு தளத்தில் விழுந்த இந்தியாவின் மூலோபாய பார்வை
23 மணி நேரம் முன் 
        
         
                 
                         
                         
                         
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        