துறைமுக அதிகார சபைக்குள் புதிய வேலைவாய்ப்புகள் : வெளியான அறிவிப்பு
துறைமுக அதிகார சபையுடன் தொடர்புடைய புதிய வேலைவாய்ப்புக்களை வழங்கவுள்ளதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த ஆண்டு (2024) இறுதிக்குள் சுமார் 20,000 வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கொழும்பு துறைமுகத்தின் பணிகளையும் அதானி நிறுவனம் பூர்த்தி செய்து வருவதாக கூறினார்.
நிர்மாணப் பணிகள் இடம்பெறுகின்றது
சுமார் 580 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் குறித்த நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய, துறைமுகத்தில் சுமார் 5,000 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், 15,000 நேரடி வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று குறிப்பிட்ட அமைச்சர், அந்த வேலைவாய்ப்புகள் அனைத்தும் தனியார் துறை மூலம் அதிகளவில் உருவாக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
ஊழியர்களுக்கு அதிக நன்மை
துறைமுக அதிகாரசபை கடந்த வருடம் (2023) 90 பில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ள நிலையில், அதிலிருந்து ஊழியர் சம்பளம், அரச வரிகள் மற்றும் செயற்பாடுகள் என சகல செலவுகளையும் தவிர்த்து 23 பில்லியன் ரூபா நிகர இலாபம் ஈட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனால், தனியார் துறையினூடாக தொழில்களை உருவாக்கும் போது ஊழியர்களுக்கு அதிக நன்மைகள் வழங்கப்படும் என கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |