யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 20 நாட்களில் 28520 பேர் கைது
யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு 20 நாட்களின் பின்னர், நாட்டில் போதைப்பொருள் பாவனை மற்றும் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 28520 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பதிவு செய்யப்பட்ட பட்டியலில் 2303 கடத்தல்காரர்கள் உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்படி, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் 1434 பேர் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.
யுக்திய நடவடிக்கையின் கீழ்
அத்துடன், 1603 போதைக்கு அடிமையானவர்கள் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதேவேளை, யுக்திய நடவடிக்கையின் கீழ் 70 கிலோ ஹெரோயின், 200 கிலோ ஐஸ் போதைப்பொருள், 340 கிலோ கஞ்சா, 35 கிலோ சாம்பல், 79147 மாத்திரைகள் மற்றும் ஏனைய போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |