யாழ் கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 20 இந்திய கடற்றொழிலாளர்கள் நிபந்தனைகளுடன் விடுதலை
நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் அத்துமீறி உள்நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கடந்த 03ஆம் திகதி கைது செய்யப்பட்ட 20 இந்திய கடற்றொழிலாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் இன்றையதினம்(16)வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 18 மாத சிறைத்தண்டனை என்ற நிபந்தனைகளுடன் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை
மேலும், இரண்டு படகுகளின் ஓட்டுனர்களுக்கும் ஆறு மாத கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டதுடன், 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒரு வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
அத்துடன் ஒரு கடற்றொழிலாளர் இரண்டாவது தடவையும் எல்லை தாண்டி வந்ததனால் அவருக்கு ஒரு வருட கால சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
மேலும் விடுதலை செய்யப்பட்ட கடற்றொழிலாளர்கள் சட்டரீதியான நடவடிக்கைகளை நிறைவுற்ற பின்னர் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படவுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |