நாட்டில் திடீரென அதிகரித்த கொரோனா உயிரிழப்புக்கள் - அச்சத்தை ஏற்படுத்தும் மரண எண்ணிக்கை
Corona
Corona Death
SriLanka
By Chanakyan
நாட்டில் கொரோனா தொற்றால் மேலும் 198 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வகையில், 30 வயதுக்கு உட்பட்டவர்களில், ஆண் ஒருவரும், 30 தொடக்கம் 59 வயதுக்கிடைப்பட்டவர்களில் 37 ஆண்களும், 14 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 81 ஆண்களும் 65 பெண்களுமாக 198 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 7,948 ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1ம் ஆண்டு நினைவஞ்சலி