நாட்டில் தொடரும் அச்சுறுத்தல்! 200இற்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் பதிவு
Corona
Death
SriLanka
By Chanakyan
இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,806ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.
இதன்படி, நேற்றைய தினம் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட 202 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 113 ஆண்களும், 89 பெண்களும் அடங்குவதாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், 30 வயதுக்கு குறைவான 2 ஆண்களும், 3 பெண்களுமான 5 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளனர்.
