கைவிடப்பட்ட 200இற்கும் மேற்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அடுத்த ஆண்டில் முன்னெடுக்கப்படும்

Ranil Wickremesinghe Shehan Semasinghe Sri Lanka Budget 2024 - sri lanka
By Sathangani Dec 15, 2023 02:51 AM GMT
Report

இலங்கையில் வெளிநாட்டு உதவிகளுடன் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவில் கைவிடப்பட்ட 200இற்கும் மேற்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அடுத்த வருடத்தின் முதற் காலாண்டில் மீள ஆரம்பிக்கப்படுமென நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் அரசியல் ஸ்திர நிலையை உறுதிப்படுத்தும் வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதென தெரிவிக்கும் இராஜாங்க அமைச்சர், அரசாங்கத்தின் வரவு செலவு முகாமைத்துவத்துக்கான பின்னணி உருவாகியுள்ளதெனவும் தெரிவித்தார்.

அதிபர் ஊடக மையத்தில் நேற்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் 

பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவித்தல்

பேருந்து கட்டணம் தொடர்பில் வெளியான அறிவித்தல்

சர்வதேச நாணய நிதியத்தின் உதவி

”வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் அரசாங்கத்தின் ஸ்திர நிலையை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணைக் கடனுக்கான அனுமதி கிடைத்தமை முன்னோக்கிச் செல்வதற்கு வலுவாக அமைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து உலக வங்கி, ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றின் நிதி உதவிகளும் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். இந்த கடனுக்கான அனுமதி கிடைக்காது என்று போலிப் பிரசாரங்கள் செய்யப்பட்டமை கவலைக்கிடமானது.

கைவிடப்பட்ட 200இற்கும் மேற்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அடுத்த ஆண்டில் முன்னெடுக்கப்படும் | 200 Development Projects Will Be Start Next Year

சரிவடைந்த நாட்டின் பொருளாதாரத்தை மீளக் கட்டமைத்து முன்னேற்றிச் செல்ல சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடுவதைத் தவிர வேறு வழிமுறைகள் எவையும் இருக்கவில்லை. இந்நிலையில் ஏனைய கடன் வழங்குநர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் வரைவுக்குள் இலங்கை எவ்வாறு செயற்பட போகின்றது என்பது தொடர்பிலேயே அவதானம் செலுத்துக்கின்றனர்.

இவ்வாறான வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் போது நாட்டு மக்கள் நெருக்கடிக்கு உள்ளனர் என்பதையும் நாம் கருத்தில் கொள்வோம். இருப்பினும் தற்போதைய சூழ்நிலையில் பிரசித்தமான தீர்மானங்களை மேற்கொள்ள முடியாது. நெருக்கடிக்கு முகம் கொடுத்த காலத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமைத்துவத்தையும், நாடாளுமன்றத்தின் ஒத்துழைப்பையும் நாட்டு மக்களின் பொறுமையான அணுகுமுறையையும் நன்றியுடன் நினைவுக்கூர வேண்டும்.

எவ்வாறாயினும் தற்போது வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அரசாங்கத்தின் செயற்பாடுகளை வலுவாக முன்னெடுத்துச் செல்ல முடியும். அதனை விடுத்து அரசியல் ரீதியான பார்வையினால் எதனையும் சாதிக்க முடியாது.

14 நாடுகளின் உயரிய விருதுகளை பெற்ற பிரதமர் மோடி

14 நாடுகளின் உயரிய விருதுகளை பெற்ற பிரதமர் மோடி

ரணில் விக்ரமசிங்க அதிபராக பொறுப்பேற்கும் முன்

கடந்த கால தவறுகள் தொடர்பில் பேசிக்கொண்டிருப்பதால் மாத்திரம் அவற்றை நிவர்த்திக்க மாற்று வழி கிடைக்காது. சர்வதேச நிதியத்துடனான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதலே எதிர்கட்சி அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்த ஆரம்பித்தது. அதற்கு மாறாக சிலர் தாம் பிரசித்தம் ஆவதற்காகவும் வரவு செலவுத் திட்டத்தை எதிர்த்தமை வருந்தற்குரியது.

கைவிடப்பட்ட 200இற்கும் மேற்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அடுத்த ஆண்டில் முன்னெடுக்கப்படும் | 200 Development Projects Will Be Start Next Year

அதேநேரம் வற் வரி விதிப்பு பணவீக்கத்தில் 2 சதவீத தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மறுமுனையில் வரி செலுத்துவோர், செலுத்தாமால் இருப்போர் தொடர்பில் கவனம் செலுத்தி வரி வலையமைப்பை விஸ்தரிக்க எதிர்பார்த்துள்ளோம்.

எவ்வாறாயினும் கடன் மறுசீரமைப்புக்கு பின்னர் கடந்த காலத்தில் இடைநிறுத்தப்பட்ட பல திட்டங்களை 2024 ஆம் ஆண்டில் மீள ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளோம். அதேபோல் 2021ஆம் ஆண்டு இறுதி முதல் 2023 இறுதி காலாண்டு வரையில் மறை பெறுமானத்தில் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சியை 2024 ஆம் ஆண்டி நேர் பெறுமானத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளோம்.

எதிர்கட்சியினர் கூறுவது போல இலகுவாக அவற்றை செய்ய முடியாது. அவ்வாறு அவர்களால் செய்ய முடியுமெனில் அதிபர் ரணில் விக்ரமசிங்க நாட்டின் அதிபராக பொறுப்பேற்கும் முன்னதாக அவர்களுக்கு அதற்கான வாய்ப்பு காணப்பட்டது. மேலும் நாட்டிலுள்ள பொருளாதார மதிப்பீட்டு நிறுவனங்கள் சிலவும் பொருளாதார செயற்பாடுகள் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான தகவல்களை வெளியிடுவதை நிறுத்த வேண்டும்.

எவ்வாறாயினும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது நம்பிக்கை இருப்பதால் எதிர்க்கட்சியினரின் போலிப் பிரசாரங்களுக்கு அரசாங்கம் ஒருபோதும் பதிலளிக்கவில்லை. அரசாங்கத்தின் நிலைப்பாடு சரியானது என்பது சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவனைக்கான அனுமதி கிடைத்ததன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வடக்கு - கிழக்கில் வெள்ள அனர்த்தத்துக்கான அபாயம்:வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வடக்கு - கிழக்கில் வெள்ள அனர்த்தத்துக்கான அபாயம்:வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

2024 வரவு செலவுத் திட்டம்

தற்போது நாட்டில் அரசியல், சமூக, பொருளாதார நிலைத்தன்மை ஏற்பட்டுள்ளது. பொருளாதார அபிவிருத்தியின் பலன்களும் படிப்படியாக கீழ் மட்டம் வரையில் சென்றடையும். இவ்வாறான நிலைமைக்கு கைகொடுத்த சர்வதேச நாணய நிதியத்திற்கு நன்றி கூற வேண்டும். அதேநேரத்தில் சர்வதேச நாணய நிதியத்தினால் எவ்வித நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை என்றும். மாறாக நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்குத் தேவையான வழிகாட்டல் வரைவையே மேற்படி நிதியம் வழங்கியுள்ளது.

கைவிடப்பட்ட 200இற்கும் மேற்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அடுத்த ஆண்டில் முன்னெடுக்கப்படும் | 200 Development Projects Will Be Start Next Year

அதேபோல் 2023 – 2024 ஆம் ஆண்டுக்களுக்காக ஐ.எம்.எப் 667 மில்லியன் டொலர்களை அனுமதித்திருப்பதோடு உலக வங்கி 1300 மில்லியன் டொலர்களையும் ஆசிய அபிவிருத்தி வங்கி 1553 மில்லியன் டொலர்களையும் வழங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், வரவு செலவுத் திட்டம் தொடர்பில் ஒரு மாத காலமாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் எதிர்கட்சியினர் ஏற்றுக்கொள்ளக்கூடிய எந்தவொரு திருத்தத்தையும் முன்வைக்கவில்லை. மாறாக அரசாங்கத்தின் மீதான விமர்சனங்களை மாத்திரமே முன்வைத்தமை கவலைக்கிடமானதாகும்.

எவ்வாறாயினும் சரிவடைந்த பொருளாதாரத்தை நினைத்த மாத்திரத்தில் மீட்டெடுக்க முடியாது என்பதே உண்மையாகும். சரிவை சந்தித்துள்ள நாடுகளுடன் ஒப்பிடுகைளில் இலங்கை ஓரளவு விரைவாகவே மீண்டுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்தினால் அனுமதிக்கப்பட்ட இரண்டாவது தவணைக் கடன் தொகை விரைவில் நாட்டுக்கு கிடைக்கும்“ என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!



ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பம்பலப்பிட்டி

08 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
மரண அறிவித்தல்

அல்வாய் தெற்கு

08 Dec, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, இந்தியா, British Indian Ocean Terr., தெஹிவளை

12 Dec, 2018
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, Beverwijk, Netherlands

08 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, வட்டக்கச்சி இராமநாதபுரம்

12 Dec, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியவளை, ஒட்டுசுட்டான்

12 Dec, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை, Paris, France, Melbourne, Australia

11 Dec, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுங்கேணி, வவுனியா, Brampton, Canada

08 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நாரந்தனை, ஆனைக்கோட்டை, பிரான்ஸ், France

09 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கண்டி, திருநெல்வேலி, Neuilly-sur-Marne, France

13 Nov, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

12 Dec, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
25ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, வவுனியா

22 Nov, 1999
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கனடா, Canada

11 Dec, 2019
100வது ஆண்டு பிறந்தநாள் நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

10 Dec, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு, நுணாவில் மேற்கு, கனடா, Canada

10 Dec, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

பிரான்ஸ், France, Harrow, United Kingdom

10 Dec, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனுராதபுரம், பண்டாரிக்குளம், London, United Kingdom

10 Dec, 2023
3ம், 11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, திருகோணமலை

02 Dec, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
மரண அறிவித்தல்

மலாக்கா, Malaysia, Kuala Lumpur, Malaysia, சரவணை, கந்தர்மடம், London, United Kingdom

08 Dec, 2024
மரண அறிவித்தல்

மண்டைதீவு 6 ஆம் வட்டாரம், Kloten, Switzerland

06 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். அத்தியடி, Montreal, Canada

20 Dec, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Brake (Unterweser), Germany, Munich, Germany

04 Dec, 2024
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, கொழும்பு, Scarborough, Canada

05 Dec, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், வட்டக்கச்சி, பிரான்ஸ், France

28 Nov, 2024