பிணைக் கைதிகளை பரிமாறிக்கொண்ட உக்ரைன் மற்றும் ரஷ்யா
உக்ரைனும் (Ukraine) ரஷ்யாவும் (Russia) 200க்கும் மேற்பட்ட போர்க் கைதிகளை பரிமாறிக்கொண்டமாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
2 வருடங்களுக்கு மேலாக உக்ரைன் ரஷ்ய போர் தொடர்ந்து வரும் நிலையில், ஐக்கிய அரபு எமிரேட்ஸின் மத்தியஸ்த நடவடிக்கை காரணமாக உக்ரைன் மற்றும் ரஷ்யா ஆகிய இரு தரப்பில் இருந்தும் 103 போர் பிணைக் கைதிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு விடுவிக்கப்பட்டவர்கள் ஒகஸ்ட் மாதம் குர்ஸ்க் (Kursk) பகுதியில் உக்ரைன் நுழைந்த போது சிறைப்பிடிக்கப்பட்ட ரஷ்ய வீரர்களும் உள்ளடங்குவார்கள்.
200க்கும் மேற்பட்டோர் விடுவிப்பு
இரு தரப்பும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) “எங்கள் மக்கள் வீட்டில் இருக்கிறார்கள்” என தெரிவித்துள்ளார்.
அதே சமயம் உக்ரைன் நடத்திய சமீபத்திய திடீர் தாக்குதலில், ரஷ்யாவின் எல்லை நகரங்களில் 500 சதுர மைல் தொலைவை உக்ரைன் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளனர்.
இதேவேளை, ரஷ்ய (Russia) இராணுவத்தில் சிக்கிய 45 இந்திய (India) இராணுவ வீரர்கள் மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |