ஆட்டநிர்ணய சதி அம்பலம்: புட்டு காட்டுகிறார் மகிந்தானந்த
2011 உலகக் கிண்ணப் போட்டியில் ஆட்ட நிர்ணய சதி இடம்பெற்றதாக அன்று தாம் முன்வைத்த குற்றச்சாட்டு இன்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
தமக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையிலேயே இவ்வாறு தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இரகசிய காவல்துறையினரிடம்
ஆனால் அவற்றை வெளிப்படுத்திய பின்னர், அனைத்து தரப்பினரும் சேர்ந்து தன்னைத் தாக்கி இரகசிய காவல்துறையினரிடம் அழைத்துச் சென்றதை அவர் நினைவு கூர்ந்தார்.
ஆனால் அன்று தான் வெளிப்படுத்திய விடயம் இன்று நிரூபணமாகியுள்ளதாகவும், இலங்கையின் ஆட்ட நிர்ணய முகவர் இலங்கை வீரர் என தெரியவந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆட்ட நிர்ணய சதியில் கைது
இதேவேளை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சசித்ர சேனாநாயக்க, ஆட்ட நிர்ணயம் செய்த குற்றச்சாட்டில் கடந்த (06) ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.