உயர்தர வகுப்புக்கள் குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Ministry of Education
Colombo
Sri Lanka
G.C.E. (O/L) Examination
By Sathangani
2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைக்கு (G.C.E O/L) தோற்றிய மாணவர்களுக்கான உயர்தர வகுப்புக்கள் (Advance Level) நாளை (06) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நடைபெற்று முடிந்த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சு (Ministry of Education) இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
உயர்தர வகுப்புக்களின் ஆரம்ப நிகழ்வு, கொழும்பு (Colombo) – நாலந்தா பாடசாலையில் நாளை காலை ஆரம்பமாகவுள்ளது.
பரீட்சை பெறுபேறுகள்
கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சைகளின் பின்னர் பெறுபேறுகளை பெற்றுக் கொள்ள மூன்று மாதங்கள் காத்திருக்க வேண்டிய பின்னணி குறித்து கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் உயர் தர வகுப்புக்களை உடனடியாக ஆரம்பிக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்