க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு வெளியாகியுள்ள முக்கிய அறிவிப்பு !
க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவுறுத்தல்களை பரீட்சைகள் திணைக்களம் வழங்கியுள்ளது.
இதனடிப்படையில், பரீட்சை விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் பத்தாம் திகதிக்கு முன்னர் இணையத்தளம் மூலமாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “விண்ணப்பதாரிகள் www.doenets.lk அல்லது www.Onlineexams.gov.lk/eic ஆகிய இணையத்தளங்கள் மூலமோ அல்லது DoE உத்தியோகபூர்வ தொலைபேசி செயலி மூலமாகவோ விண்ணப்பங்களை அனுப்பலாம்.
விண்ணப்பதாரர்கள்
விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான கடைசித் திகதி நீடிக்கப்பட மாட்டாது எனவே குறித்த திகதிக்கு முன்னதாகவே பரீட்சைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
பாடசாலை விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை அதிபர் மூலமாகவோ அல்லது தனியார் விண்ணப்பதாரர்கள் மூலமாகவோ அனுப்ப முடியும்.
இதேவேளை, தனியார் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த பின்னர் அதன் அச்சிடப்பட்ட பிரதியை தங்கள் பாதுகாப்பில் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |