நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் குறித்து வெளியான அறிவிப்பு
இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் நாளை (11) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.
பிரசார நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் எதிர்வரும் 12ஆம் திகதிக்குள் தேர்தல் பிரச்சார அலுவலகங்கள் அகற்றப்பட வேண்டுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R.M.A.L.. Rathnayake) குறிப்பிட்டுள்ளார்.
தற்போது, தேர்தல் பிரச்சாரத்திற்காக வேட்பாளர்கள் அமைத்துள்ளனர் அலுவலகங்களில் தொகுதி அளவில் இயங்கும் அனைத்து அலுவலகங்களையும் வரும் 12ம் திகதி நள்ளிரவு முதல் அகற்றப்பட வேண்டும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேர்தல் அலுவலகம்
நள்ளிரவு 12.00 மணிக்குப் பிறகு கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களுக்கு ஒரு தொகுதியில் ஒரு தேர்தல் அலுவலகத்தை மாத்திரமே வைத்திருக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அந்த திகதியில் இருந்து, வேட்பாளர்கள் தொகுதிக்கு ஒரு அலுவலகத்தை மாத்திரம் வைத்திருக்க முடியும் என்றும் அத்துடன் வேட்பாளரின் வீட்டை அலுவலகமாக பராமரிக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த அலுவலகங்களில் எதுவும் அலங்கரிக்கவோ அல்லது வேறு எந்த பிரசார பணிகளைச் செய்யவோ முடியாது" என அவர் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |