2024இல் இஸ்ரேல் பழிவாங்குமா : அல்லது பழிவாங்கப்படுமா
2024 ஆம் ஆண்டு என்பது பழிவாங்கல்களின் ஆண்டாக இருக்க போகின்றது என்பது தெளிவாக தெரிகின்றது.
புதுவருடம் பிறந்து வெறும் 04 நாட்களே ஆன நிலையில், வெவ்வேறு தலைவர்கள், வெவ்வேறு இடங்கள், வெவ்வேறு சந்தர்பங்கள் என்றாலும் இந்த புதிய ஆண்டை அடிப்படையாக கொண்டு வெளியாகி வருகின்ற எச்சரிக்கைகளை பார்க்கும் போது மிகப்பெரிய பழிவாங்கல்கள் இடம்பெற்று பல இடங்களிலும் இரத்த ஆறு ஓடப்போகின்ற ஆண்டாக இந்த ஆண்டு அமைந்து விடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 07 ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் மேற்கொண்ட அதிரடி தாக்குதலில் சம்பந்தப்பட்ட அத்தனை பேரையும் இஸ்ரேலின் மொசாட் தேடி தேடி கொலை செய்ய வேண்டுமென்ற உத்தரவுடன்தான் 2024ஆம் ஆண்டு பிறந்ததது.
கடந்த வருடம் டிசம்பர் மாதம் முதலாம் திகதி இஸ்ரேலிய பிரதமர் அந்த உத்தரவை வழங்கிய போது, 2024 ஆம் ஆண்டு முதல் ஹமாஸ் தலைவர்கள் மீது தனது வேட்டைகள் ஆரம்பிக்கப்படுமென்று பரவலாக எதிர்ப்பார்க்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பிலான மேலதிக தகவல்களை ஐபிசி தமிழின் இன்றைய உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி சுமந்து வருகின்றது.