2024 இல் நடக்க போவது இது தான்..! அதிர்ச்சி தரும் நாஸ்டர்டாம்ஸ் கணிப்புகள்
2024 ஆம் ஆண்டை மிகுந்த எதிர்பார்ப்புடன் வரவேற்றுள்ள நிலையில் புத்தாண்டுக்குரிய பல கணிப்புகளை ஜோதிடர்கள் மற்றும் மாயவாதிகளின் கணித்துள்ளனர்.
அந்தவகையில் 16 ஆம் நூற்றாண்டின் பிரெஞ்ச ஜோதிடரான நோஸ்ட்ராடாமஸ், 2024 ஆம் ஆண்டு உட்பட எதிர்காலத்திற்கான கணிப்புகளைச் செய்துள்ளார்.
இவர் 465 வருடங்களுக்கு முன் எழுதிய 'லெஸ் ப்ரோபீடீஸ்' புத்தகத்தில் இந்த கணிப்புகளை பற்றி குறிப்பிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டிற்கான கணிப்புகள்
நோஸ்ட்ராடாமஸின் கணிப்புகள் புரிந்து கொள்வதற்கு கஷ்டமாக இருந்தாலும் அவருடைய இவரது ஏராளமான கணிப்புகள் உண்மையாகி இருக்கின்றன என கூறப்படுகிறது.
அந்த வகையில் நோஸ்ட்ராடாமஸின் 2024 ஆம் ஆண்டிற்கான கணிப்புகளை பார்க்கலாம்.
ஒரு கடற்படை போர்
நோஸ்ட்ராடாமஸ்2024 ல் ஒரு "கடற்படைப் போர்" உருவாக வாய்ப்புள்ளதாக முன்னறிவித்துள்ளார்.
மேலும் "சிவப்பு எதிரி பயத்தால் வெளிர் நிறமாகி, பெருங்கடலை அச்சத்தில் ஆழ்த்துவார்" என்று அவர் கூறியுள்ளார்.
"சிவப்பு எதிரி" என்று நோஸ்ட்ராடாமஸ் சீனாவையும் நாட்டின் சிவப்புக் கொடியையும் குறிப்பிடுவதாகவும் தைவான் தீவுடனான சீனாவின் பதட்ட நிலைகளை சுட்டிக்காட்டுவதாக இது உள்ளது.
அரசியல் மாற்றம்
அதேவேளை நோஸ்ட்ராடாமஸின் இரண்டாவது கணிப்பாக "தீவுகளின் ராஜா" "பலத்தால் விரட்டப்படுவார்" என்று கூறியுள்ளார். அதாவது பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் அரசரைக் அவர் குறிப்பிடுவதாக சிலர் நம்புகிறார்கள்.
"விரைவில் ஒரு பேரழிவுகரமான போர் ஏற்படும் ஒரு புதிய ராஜா தேர்ந்தெடுக்கப்படுவார் அவர் நீண்ட காலமாக பூமியை அமைதிப்படுத்துவார் ”என கூறப்பட்டுள்ளது. அதாவது புதிய ஒரு அரசர் பிரித்தானியாவிற்கு தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிஞர்கள் கூறுகின்றனர்.
காலநிலை பேரழிவு
சமீப ஆண்டுகளில் காலநிலை நெருக்கடி மிகவும் அதிகமாக ஏற்பட்டுள்ளது.
எனவே 2024 ஆம் ஆண்டில் இந்த காலநிலை மோசமாகிவிடும் என்று கணித்துள்ளார். அவரது கணிப்புகளில் "வறண்ட பூமி மேலும் வறண்டு வளரும், அதைப் பார்க்கும்போது பெரும் வெள்ளம் ஏற்படும்." என கூறப்பட்டுள்ளது.
ஒரு புதிய போப்
இவரது கணிப்பின்படி உலகம் விரைவில் போப் பிரான்சிற்கு மாற்றாக புதிய போப்பை தேர்வு செய்யும்
மிகவும் வயதான போப் ஆண்டவரின் மரணத்தின் மூலம், நல்ல வயதுடைய ஒரு ரோமன் அந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார். அவர் நீண்ட காலம் பதவியில் இருப்பார் என்று கூறப்பட்டுள்ளது.
செயற்கை நுண்ணறிவு
செயற்கை நுண்ணறிவு சாதனங்கள் மனிதர்களை கட்டுப்படுத்த தொடங்கும். ஏஐ சாதனங்கள் மனிதர்களை ஆளும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |