ரணிலின் முடிவு பாரதூரமானது: சபாநாயகர் எச்சரிக்கை
வற்(VAT) வீதத்தை அதிகரிக்காவிட்டால், அடுத்த வருடம் நாடு வங்குரோத்து நிலைக்கு தள்ளப்பட்டிருக்கும் என அண்மையில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்த நிலையில் அதனை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மறுத்துள்ளார்.
“எரிபொருளின் விலை சிறிதளவு அதிகரிக்கப்பட்டாலும் அதனை மக்களால் தாங்கிக் கொள்ள் முடியும் ஆனால் வற் வரியை அதிகரிப்பதற்கான தீர்மானத்தை ஏற்றுக்கொள்ளவில்லை” என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வற் (VAT) வரியை 18% அதிகரிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டாலும் அது மீண்டும் மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளதாவும் கூறியுள்ளார்.
பெறுமதி சேர் வரி
அத்தோடு, வற் வரியை(VAT) 18 சதவீதமாக அதிகரித்தால் மக்கள் பொருளாதார ரீதியில் பிரச்சினைக்கு முகங்கொடுக்கும் நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த 31 ஆம் திகதி இலங்கையில் பெறுமதி சேர் வரியினை (VAT) 18 சதவீதமாக அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்திருந்தார்.
அமைச்சரவை அங்கீகாரம்
அதேவேளை, வற் (VAT) வரி 15 சதவீதமாக நடைமுறையில் இருக்கின்றது, 2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் அரசாங்கத்தின் வரி வருமானம் 51 வீதத்தால் அதிகரித்துள்ளதாக அமைச்சரவை தீர்மானங்கள் அடங்கிய அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி சர்வதேச நாணய நிதியத்துடன் இணக்கம் காணப்பட்டதன் பிரகாரம் வரி வருமானம் மற்றும் முதன்மை சமநிலை இலக்குகளை அடைவதற்காக வற் (VAT) ஐ அதிகரிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.