உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் குறித்து வெளியான தகவல்
2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறு முடிவுகளை வெளியிடுவது குறித்து பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே கருத்து வெளியிட்டுள்ளார்.
அதன்படி, குறித்த பரீட்சைப் பெறுபேறுகளை சித்திரைப் புத்தாண்டுக்கு முன்னதாக வெளியிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
பெறுபேறுகளை வெளியிடுவதற்கான இறுதி கட்டத் தயாரிப்புப் பணிகள் தற்போது துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் ஏற்பட்ட டித்வா புயல்
2025ஆம் ஆண்டிற்கான உயர்தரப் பரீட்சைகள் கடந்த நவம்பர் 10ஆம் திகதி ஆரம்பமான நிலையில் இடையில் ஏற்பட்ட 'டித்வா' புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டிருந்தது.

இதனால் ஒத்திவைக்கப்பட்ட சில பாடங்களுக்கான பரீட்சைகள், கடந்த ஜனவரி 12 முதல் 20 வரை மீள நடத்தப்பட்ட அடிப்படையில் அனைத்துப் பாடங்களுக்கான பரீட்சைகளும் ஜனவரி 16ஆம் திகதியுடன் உத்தியோகபூர்வமாக நிறைவடைந்தன.
இம்முறை சுமார் மூன்று இலட்சம் மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
you may like this
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |