புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறு! விடைத்தாள் மதிப்பீடுகள் இன்று ஆரம்பம்
2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நேற்று (10) நிறைவடைந்ததைத் தொடர்ந்து முதற்கட்ட விடைத்தாள் மதிப்பீடுகள் இன்று (11) தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த விடயத்தினை பரீட்சைகள் திணைக்களம் (Department of Examinations) அறிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் 2,787 மையங்களில் நடத்தப்பட்ட இந்தப் பரீட்சையில் தோற்றுவதற்கு 379,951 மாணவர்கள் தகுதி பெற்றிருந்ததாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திக லியனகே (Indika Liyanage) தெரிவித்துள்ளார்.
பரீட்சை முடிவுகளை வெளியிடல்
அனைத்து ஆயத்தக் கூட்டங்களும் வழிகாட்டுதல்களும் இறுதி செய்யப்பட்டுள்ளதுடன் மதிப்பெண் செயல்முறை ஓகஸ்ட் 22 முதல் 27 வரை நியமிக்கப்பட்ட மையங்களில் 43 நடைபெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
செப்டம்பர் 20 ஆம் திகதிக்குள் பரீட்சை முடிவுகளை வெளியிடுவதற்கு பரீட்சைகள் திணைக்களம் எதிர்பார்த்துள்ளது.
இதேவேளை 2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான இறுதி திகதி நாளை (12) நள்ளிரவுடன் நிறைவடைகின்றது.
உயர்தரப் பரீட்சை நவம்பர் 10 முதல் டிசம்பர் 5 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் திருவிழா


இதபோல் ஒருநாளில் தான் கிருஷாந்தி கொன்று புதைக்கப்பட்டார்! 2 நாட்கள் முன்
