வெளியான அறிவிப்பு - அமைதிக்கான நோபல் பரிசு வென்ற தலைவர் இவர்தான்
2025ஆம் ஆண்டு நோபல் பரிசுக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
கடந்த 6 ஆம் திகதி முதல் அறிவிக்கப்பட்டுவரும் நோபல் பரிசுகளின் வரிசையில் முக்கிய உற்றுநோக்கப்பட்ட சமாதானத்துக்கான நோபபல் இந்த அறிவிப்பு இன்று காலை ஒஸ்லோவில் உள்ள நோபல் நிறுவனத்தில் அறிவிக்கப்பட்டது.
நோபல் பரிசை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் (Donald Trump) பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில் இன்றைய தினம் அமைதிக்கான நோபல் பரிசு தொடர்பில் அறிவிப்பு வெளியாகியது.
ட்ரம்பின் கனவு கலைந்தது
சுமார் 7 போர்களை தான் முடிவுக்குக் கொண்டு வந்துள்ளதாகக் குறிப்பிட்டு தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என ட்ரம்ப் வலியுறுத்தி வந்தார்.
எனினும் இவ்வாண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுவேலா எதிர்க் கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சோடா வசமாகியது. இந்நிலையில் நோபல் பரிசுக்காகக் காத்திருந்த ட்ரம்பின் கனவு கலைந்தது.
வெனிசுலா மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை ஊக்குவித்ததற்காகவும், சர்வாதிகாரத்தில் இருந்து ஜனநாயகத்திற்கு அமைதியான மாற்றத்தை நோக்கி அவர் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விருதுக்கு 244 தனிநபர்கள் மற்றும் 94 அமைப்புகள் உட்பட மொத்தம் 338 பரிந்துரைகள் சமர்ப்பிக்க பட்டிருந்தது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
