தாஜூதீனின் கொலை பட்டியலில் அநுர: ராஜபக்ச ஆதரவாளர் பகிரங்கம்
வசீம் தாஜூதீன், பிரகீத் எக்னெலிகொட பட்டியலில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சேர்த்திருக்க வேண்டும் என சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
யூடியூப் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
அவருடைய இந்தக் கருத்து தற்போது சமூக வலைத்தளங்களில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மொட்டுக் கட்சி
மொட்டுக் கட்சியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில் தற்போது பல விடயங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
பாதாள உலகக் குழுக்களுக்கும், நாட்டில் மர்மமான முறையில் இடம்பெற்ற முக்கிய கொலைச் சம்பவங்களுக்கும் தொடர்புகள் உள்ளமை தற்போது தெரியவந்துள்ளது.
இவற்றின் பின்னணியில் ராஜபக்ச தரப்பினருக்கு தொடர்புகள் உள்ளமை வெளிப்படுத்தப்பட்டு வரும் ஒரு சில உண்மைகளின் அடிப்படையில் தெரியவருகிறது.
இந்நிலையிலேயே, சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் முன்நின்று செயற்படும் முக்கிய ஆதரவாளர் ஒருவர் ஜனாதிபதிக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் கருத்தொன்றை வெளியிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
