30 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற நடவடிக்கைகள்
புதிய இணைப்பு
சபாநாயகர் தலைமையில் இன்று (01) காலை 9 மணிக்கு ஆரம்பமாகிய நாடாளுமன்ற அமர்வு சபாநாயகரால் 30 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதன்போது, நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுப்பதா என்பது தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்காக இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலாம் இணைப்பு
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் குழு நிலை விவாதம் சபாநாயகர் தலைமையில் இன்று (01.12.2025) காலை 9 மணிக்கு நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகியது.
இந்த குழுநிலை விவாதமானது கடந்த 15 ஆம் திகதி முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை 17 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் காலை 09.00க்கு ஆரம்பமான இன்றைய நாடாளுமன்ற நடவடிக்கைகள் நள்ளிரவு 12.00 வரை நடைபெறவுள்ளது.
அதன்படி, காலை 09.00 முதல் 09.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 22 இன் (1) முதல் (6) வரையின் பிரகாரம் நாடாளுமன்ற அலுவல்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் காலை 09.30 முதல் 10.00 வரை வாய்மூல விடைக்கான வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதுடன் 10.00 முதல் 10.30 வரை நாடாளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
காலை 10.30 முதல் மாலை 6.00 வரை ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2026 இன் இளைஞர் அலுவல்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு ஆகியவற்றின் 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதம் நடைபெறவுள்ளது.
மாலை 6.00 முதல் நள்ளிரவு 12.00 வரை புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு, சுற்றாடல் அமைச்சு ஆகியவற்றின் 2026 வரவு செலவுத் திட்ட ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |