2027 பாடசாலை தவணைகள்! கல்வி அமைச்சு வெளியிட்ட முக்கிய சுற்றறிக்கை
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு 2027ஆம் ஆண்டிற்கான பாடசாலை தவணைக் கால அட்டவணை, பொது விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய பரீட்சை திகதிகள் அடங்கிய சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளது.
பொது விடுமுறைகள் மற்றும் பரீட்சை அட்டவணைகளைக் கருத்தில் கொண்டு, 2027ஆம் ஆண்டில் அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகள் மற்றும் பிரிவேனாக்களுக்கு மொத்தம் 197 பாடசாலை நாட்களை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான தவணை அட்டவணை
- முதல் தவணை: 2027 ஜனவரி 04 (திங்கள்) முதல் 2027 ஏப்ரல் 09 (வெள்ளி) வரை நடைபெறும்.
- இரண்டாம் தவணை: 2027 ஏப்ரல் 26 (திங்கள்) முதல் 2027 ஜூலை 30 வரை நடைபெறும்.
- மூன்றாம் தவணை: 2027 ஓகஸ்ட் 30 (திங்கள்) முதல் 2027 டிசம்பர் 03 (வெள்ளி) வரை நடைபெறும்.
பரீட்சைகள்
அத்தோடு, முஸ்லிம் பாடசாலைகளுக்கான கல்வி ஆண்டு இரண்டு தவணைகளாகப் பிரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், க.பொ.த உயர்தரப் பரீட்சை 2027 ஓகஸ்ட் மாதத்திலும், க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2027 டிசம்பர் மாதத்திலும் நடத்தப்படும் என்றும் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தவிர்க்க முடியாத காரணங்களால் பாடசாலை நாட்கள் ரத்து செய்யப்பட்டால், அதற்குப் பதிலாக ஈடுசெய்ய வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5