கொழும்பில் பேருந்து மோதியதில் பலியான வெளிநாட்டுப் பயணி! சாரதி அதிரடி கைது
கொழும்பு-கோட்டை காவல்துறை பிரிவுக்குட்பட்ட யார்க் வீதியில் உள்ள பாதசாரிகள் கடவை பகுதியில், வீதியைக் கடக்க முயன்ற வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் பேருந்து மோதி உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவமானது, நேற்று(20) வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது.
புறக்கோட்டையை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, வீதியைக் கடக்க முயன்ற அந்த நபர் மீது மோதியதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
பேருந்தின் சாரதி கைது
விபத்தில் காயமடைந்த அவர் உடனடியாகக் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த வெளிநாட்டுப் பிரஜையின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விபத்துடன் தொடர்புடைய பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில கோட்டை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 5