பல்வேறு குற்றச்சாட்டுகள் : 208 காவல்துறை அதிகாரிகள் கைது..!
போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் மொத்தம் 208 காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறை ஊடகப் பேச்சாளர், உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப். யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், பல்வேறு குற்றச்சாட்டுகள் காரணமாக சுமார் 1,500 காவல்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
காவல்துறையில் ஊழல்வாதிகளும், தகுதியற்ற அதிகாரிகளும்
காவல்துறை திணைக்களத்திற்குள் ஊழல்வாதிகளும், தகுதியற்ற அதிகாரிகளும் இருப்பதை ஏற்றுக்கொண்ட அவர், இத்தகைய நபர்களைக் கண்டறிந்து நீக்குவதற்கும், அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

"எங்களிடையே தகுதியற்ற நபர்கள் உள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை; அவர்களைக் கண்டறிந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுத்துள்ளோம்" என்று வூட்லர் கூறினார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |