ஹரக் கட்டாவின் கறுப்புப் பணம்: காவல்துறைக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையே பாலமாக செயற்பட்ட பௌத்த துறவி!
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் தலைவனான ஹரக் கட்டாவிடமிருந்து பெறப்பட்ட பில்லியன் கணக்கான கறுப்புப் பணத்தை, நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளுக்கும் காவல்துறை உயர் அதிகாரிகளுக்கும் பகிர்ந்தளிப்பதில் ஹக்மன நந்தாலோக தேரர் என்ற பௌத்த துறவி பிரதான இடைத்தரகராக செயற்பட்டுள்ளார் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் விமானப்படை புலனாய்வு அதிகாரி கீர்த்தி ரத்நாயக்கவால் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட அவர்,
தேசபந்து தென்னகோனின் நெருங்கிய நண்பர்
முன்னாள் காவல்துறை மா அதிபர் (IGP) தேசபந்து தென்னகோனின் மிக நெருங்கிய நண்பராகவும் சீடராகவும் இந்த ஹக்மன நந்தாலோக தேரர் வலம் வந்துள்ளார்.

அதேவேளையில், ஹரக் கட்டாவிடம் 120 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் சிக்கியுள்ள அரசியல் பின்னணி கொண்ட ரகித ராஜபக்சமற்றும் சரித் அபேசிங்க ஆகியோருக்கும் இவர் மிக நெருக்கமானவர் எனத் தெரியவந்துள்ளது.
நீதிமன்றத்தை நிர்வகித்த அமைச்சுக்கும், காவல்துறையை நிர்வகித்த அமைச்சுக்கும் இடையே கடுமையான மோதல்கள் நிலவிய காலகட்டத்தில், காவல்துறைக்கும் அரசியல் தலைமைகளுக்கும் இடையே இலஞ்சப் பணப் பரிமாற்றங்களைச் சாத்தியமாக்கிய பிரதான பாலமாக இந்தத் துறவியே செயற்பட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |