ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரியின் நிலத்திற்கு படையெடுத்துள்ள காட்டு யானைகள்!
ஈஸ்டர் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட சஹாரானுக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் மாத்தளை, மஹவெல காவல் பிரிவின் ஹதமுனகல பகுதியில் உள்ள 21 ஏக்கர் நிலம் காட்டு யானைகளின் வாழ்விடமாக மாறியுள்ளதாக தெரியவந்துள்ளது.
மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் புத்த சாசன மத மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சருமான கமகெதர திசாநாயக்க தலைமையில் அண்மையில் நடைபெற்ற மாத்தளை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் பேசிய மாத்தளை மாகாணச் செயலாளர் பி.பி. சேனாதிர, மாத்தளை நகருக்கு அருகிலுள்ள கிராமங்களுக்குள் படையெடுத்த காட்டு யானைகள் இந்த நிலத்தை தங்கள் வாழ்விடமாக மாற்றி வருவதாக கூறியுள்ளார்.
நிலம் குறித்த முடிவு
தற்போது அரசாங்கக் கட்டுப்பாட்டில் உள்ள, சஹாரானுக்குச் சொந்தமான இந்த நிலத்தின் எல்லைகளை நிர்ணயிக்க நில அளவை திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அந்தப் பணிகள் இன்னும் முடிக்கப்படவில்லை என்றும் மாகாணச் செயலாளர் குழுவிடம் குறிப்பட்டுள்ளார்.
இந்த நிலம் குறித்து மகாவெல காவல்துறையின் பதில் பொறுப்பதிகாரி பி.பி. சிறிவர்தனவிடம் கேட்டபோது, ஈஸ்டர் தாக்குதல்களின் போது இந்த நிலம் இராணுவ பயிற்சி மையமாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் இருப்பதாகக் கூறியுள்ளார்.
இதன்படி, அரசாங்கத்தின் புதிய திட்டத்தின் கீழ் பயிரிட திட்டமிட இந்த நிலத்தைப் பயன்படுத்த குழு முடிவு செய்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
