காவல்துறை அதிகாரிகளுக்கு சம்பள உயர்வு: வெளியான நற்செய்தி
காவல்துறையினருக்கான சம்பள உயர்வு எதிர்வரும் ஆண்டில் நடைமுறைக்கு வரக்கூடிய வாய்ப்பு உள்ளதாக பிரதி காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகளின் பிள்ளைகளுக்கு பாடசாலை பொருட்களை வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசியபோது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொற்றாத நோய்கள்
அதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாம் காவல் அதிகாரிகளை பார்க்கும்போது, 20% முதல் 40% வரை தொற்றாத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 30% பேருக்குத் இன்னும் சோதனை செய்யப்பட்டிருக்கவில்லை. மீதமுள்ள 30% பேருக்கு ஏதேனும் உடல் நலப் பிரச்சனை இருக்கிறது.
சில அதிகாரிகளுக்கு வீட்டில் பிரச்சனைகள், வேலையிடத்தில் பிரச்சனைகள் உள்ளன. இந்த அனைத்து பிரச்சனைகளாலும் அவர்கள் தொற்றாத நோய்களுக்கு ஆளாகியுள்ளனர்.
புதிய சம்பள வடிவமைப்பு
அதனால், காவல்துறையினரின் கடமைகளை ஒழுங்கமைக்கவும், அவர்களின் செயல்திறனை அதிகரிக்கவும், காவல்துறையினர் மேற்கொள்ளும் கடமைகள் உயர்தரமுடையவை என்பதைக் காட்டவும் நாங்கள் முனைப்புடன் இருக்கிறோம்.
மேலும், காவல்துறையினருக்கு மேலும் நலன்கள் வழங்கப்படுகின்றன. காவல்துறையினர் பெறும் சம்பளம் மிகவும் குறைவாகவே உள்ளது.அதைப் பற்றி ஜனாதிபதியிடமும் கூறியுள்ளோம்.
அதனால், ஒரு புதிய சம்பள வடிவமைப்பை அடுத்த ஆண்டு நடமுறைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன,” என அவர் கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
