நாட்டில் 72 நாட்களில் கொல்லப்பட்ட 21 பேர் : காவல்துறை வெளியிட்ட தகவல்
By Sathangani
இலங்கையில் பல்வேறு பகுதிகளில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் மார்ச் 12 வரை 30 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறையின் அறிக்கை தெரிவித்துள்ளது.
இதனால் 21 பேர் உயிரிழந்துள்ளதுடன் 14 பேர் காயமடைந்துள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
குற்றக் கும்பல்களால் மேற்கொள்ளப்பட்டவை
இதேவேளை 30 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 17 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களால் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் ஏனைய 13 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டதாக பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 2 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி