மதத்தலங்கள் மீது குண்டுத்தாக்குதல் :வாட்ஸ்அப்பில் மிரட்டல் விடுத்த இளைஞர் கைது
இலங்கையில் உள்ள பல முக்கிய மதத்தலங்கள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்போவதாக வாட்ஸ்அப்பில் மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், இப்பகமுவாவைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ரங்கிரி தம்புள்ள குகைக் கோயிலின் பிரதம பூசாரியான வண. தனிகம ஆனந்த தேரர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் எழுத்துபூர்வமாக அளித்த புகாரைத் தொடர்ந்து இந்த விசாரணை தொடங்கப்பட்டது.
குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கான மிரட்டல்
அந்தப் புகாரின்படி, ஒரு வாட்ஸ்அப் குழுவில் பரப்பப்பட்ட செய்திகளில், புத்தரை அவமதிக்கும் உள்ளடக்கங்களும், புனிதப் பல் ஆலயம், ஜெய ஸ்ரீ மகா போதி, தூபராமய மற்றும் தம்புள்ள குகைக் கோயில் உள்ளிட்ட பல முக்கிய சமயத் தலங்களைக் குறிவைத்து குண்டுத் தாக்குதல் நடத்துவதற்கான மிரட்டல்களும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினிக் குற்றப் புலனாய்வுப் பிரிவின் புலனாய்வாளர்கள், பின்னர் அந்தச் செய்திகள் இப்பகமுவாவைச் சேர்ந்த 21 வயது இளைஞர் ஒருவரிடம் இருந்ததைக் கண்டறிந்தனர்.
கைதான இளைஞர் வெளியிட்ட தகவல்
புத்தரின் உருக்குலைந்த சித்திரங்களைக் காட்டும் பல படங்கள் சந்தேக நபரின் கைபேசியில் கண்டெடுக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். விசாரணையின் போது, அந்தப் பொருட்களை பொழுதுபோக்கு நோக்கங்களுக்காகப் பரப்பியதாக சந்தேக நபர் கூறியிருந்தார்.

சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஒக்டோபர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |