புதிதாக சேவையில் இணைக்கப்படவுள்ள 2100 கிராம உத்தியோகத்தர்கள்
Sri Lanka
Job Opportunity
By Sathangani
நாட்டில் தற்போது சுமார் 2,800 கிராம உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடம் நிலவுகின்றதாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், புதிதாக கிராம உத்தியோகத்தர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கான நேர்முகத் தேர்வுகள் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ளதாக அந்த அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
2100 கிராம உத்தியோகத்தர்கள்
அதற்கமைய, 2100 கிராம உத்தியோகத்தர்கள் புதிதாக சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஷோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
அண்மையில் நடைபெற்ற போட்டி பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமையவே கிராம உத்தியோகத்தர்களை இணைத்துக்கொள்ளப்படும்.
இந்நிலையில் நேர்முகத் தேர்வுகளுக்கான அழைப்பு கடிதங்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் கொடியேற்றம் - 29.07.2025

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்