விடுதலை செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் நாட்டைச் சென்றடைந்தனர்

Indian fishermen Smt Nirmala Sitharaman Sri Lanka India
By Sathangani Nov 19, 2023 10:19 AM GMT
Report

சிறிலங்கா கடற்படையினரால் நேற்று (18) எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் பாம்பன் பகுதி மீனவர்கள் 22 பேர் இரண்டு நாட்டுப் படகுகளுடன் இன்று (19) பாம்பன் துறைமுகத்தை சென்றடைந்தனர்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன் கடற்றொழிலுக்குச் சென்ற ராமேஸ்வரம், மற்றும் பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த 22 பேர் நேற்று (18)  பகல் 2 மணியளவில் பருத்தித்துறை கடற் பகுதியில் வைத்து எல்லை தாண்டி சட்டவிரோதமாக கடற்தொழிலில் ஈடுபட்ட  குற்றச்சாட்டில் சிறிலங்கா  கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் நேற்றிரவு மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு விசாரணை நடத்திய பின் யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட இருந்தனர்.

மாலதி படையணி! கடன் தொல்லையால் தற்கொலைக்கு முயன்ற முன்னாள் போராளி(காணொளி)

மாலதி படையணி! கடன் தொல்லையால் தற்கொலைக்கு முயன்ற முன்னாள் போராளி(காணொளி)


நிதி அமைச்சரின் முயற்சி 

இந்நிலையில் இந்திய மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மீனவக் குடும்பங்களின் கோரிக்கையினை ஏற்று வெளியுறவுத்துறை அமைச்சைத் தொடர்பு கொண்ட நிலைமையை விளக்கமாகச் சொல்லியதாக கூறப்படுகிறது.

விடுதலை செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் நாட்டைச் சென்றடைந்தனர் | 22 Freed Indian Fishermen Reached The Country

இந்திய அரசின் வேண்டுகோளுக்கிணங்க இலங்கை அரசு நல்லிணக்க அடிப்படையில் நள்ளிரவு 11.30 மணியளவில் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்களையும் இரண்டு நாட்டுப்படகுகளுடன் விடுவிக்குமாறு  சிறிலங்கா கடற்படை உயர் அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து 22 மீனவர்களையும் படகுகளையும் சர்வதேச கடல் எல்லை வரை சிறிலங்கா கடற்படையினர் பாதுகாப்புடன் அழைத்து  சென்று சர்வதேச கடல் எல்லையில் இந்திய கடலோர காவல்படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

ரணிலை வழிநடத்தும் சாகல ரத்னாயக்க

ரணிலை வழிநடத்தும் சாகல ரத்னாயக்க


விசாரணையின் பின்னர்

இந்திய கடலோர காவல் படையினர் மீனவர்களிடம் விசாரணை நடத்திய பின்  சொந்த ஊருக்கு செல்லுமாறு கூறியதைத் தொடர்ந்து இன்று (19) பகல் 1மணியளவில் பாம்பன் துறைமுகத்தைச் சென்றடைந்தனர்.

விடுதலை செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் நாட்டைச் சென்றடைந்தனர் | 22 Freed Indian Fishermen Reached The Country

இது தொடர்பில் விடுதலை செய்யப்பட்ட  மீனவர்கள் கூறும் பொழுது

”இரண்டு நாட்களாக கடலில் மழை, திசை தெரியவில்லை ஆகவே இலங்கை கடல் பகுதிக்குள் தெரியாமல் சென்று விட்டோம்.

நாட்டில் சீனித் தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்

நாட்டில் சீனித் தட்டுப்பாடு குறித்து வெளியான தகவல்


சிறிலங்கா கடற்படையினர் 

இதனை சிறிலங்கா கடற்படையினரிடம் சொன்னோம். ஆனால் அவர்கள் கேட்கவில்லை, ஆகவே எங்களை கைது செய்து சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

விடுதலை செய்யப்பட்ட 22 இந்திய மீனவர்களும் நாட்டைச் சென்றடைந்தனர் | 22 Freed Indian Fishermen Reached The Country

அப்போது திடீரென நள்ளிரவில் நீங்கள் எல்லாம் விடுவிக்கப்பட்டுள்ளீர்கள் உங்கள் அரசு விடுவிக்கச் சொல்லி இருக்கின்றது என கூறியதால் மகிழ்ச்சி அடைந்தோம்.

அதன் பின் சிறிலங்கா  கடற்படை எங்களை பாதுகாப்போடு அழைத்து வந்து இந்திய கடலோர காவல் படையிடம் ஒப்படைத்தனர்.

நாங்கள் வரும்பொழுது காற்று மழை காரணமாக காலதாமதம் ஆகி தற்போது தான் வந்து சேர்ந்தோம்.

எங்களையும் எங்கள் படகுகளை விடுவித்த இந்திய அரசுக்கு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்“ எனத் தெரிவித்தனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி தெற்கு, Harrow, United Kingdom

20 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

தாவடி, London, United Kingdom

15 Jun, 2026
மரண அறிவித்தல்

Basel, Switzerland, Brislach, Switzerland

16 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025