ரணிலுக்கான ஆதரவு எதுவரை ..! உண்மையை உடைத்தார் நாமல்
“எவருக்குத்தான் அதிபராக விருப்பம் இல்லை, இங்குள்ள 225 பேருக்கும் அதிபராக விருப்பம். ஆனால் கட்சி எடுக்கும் தீர்மானம் தான் முக்கியம். அதனையே நாம் ஏற்கிறோம்.
” இவ்வாறு தெரிவித்தார் பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான நாமல் ராஜபக்ச (namal rajapaksha).
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து 20 நாடாளுமன்ற உறுப்பினர்களை
ஐக்கிய மக்கள் சக்தி(sjb)யில் இருந்து 20 நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து வந்தால் சிறிலங்கா பொதுஜன பெரமுன, அதிபர் ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe)வுக்கு ஆதரவு வழங்குவதாக தெரிவிக்கும் செய்தி குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது அதிபர் வேட்பாளர் குறித்து நாம் கலந்துரையாட வேண்டிய நேரம் இது. நமது கலந்துரையாடல்கள் தொடர்கின்றன. விரைவில் நமது வெற்றி பெறும் வேட்பாளரை நாம் அறிவிப்போம்.
ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து 20 உறுப்பினர்களை எடுத்தால் நாம் அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு அளிப்போம் என்பதற்கு முன்பாக கொள்கைகள் குறித்து நாம் கவனிக்க வேண்டியுள்ளது. எமது கொள்கைகளுக்கு இணங்கவே நாம் கூட்டணி அமைப்போம். அவ்வாறு இன்றி தனிப்பட்ட நபரை கருத்தில் கொண்டு அல்ல.கொள்கை ரீதியாக கலந்துரையாடி வருகிறோம், எதிர்வரும் காலங்களில் பார்ப்போம்.
ரணிலுக்கான ஆதரவு எதுவரை
நாம் அதிபராக ரணில் விக்ரமசிங்கவை நியமித்தது அடுத்த அதிபர் தேர்தல் வரும் வரைக்கும் மாத்திரமே.. அது அவருக்கும் தெரியும். எதிர்வரும் தேர்தல்கள் குறித்து எமது கட்சியுடனும் கட்சி உறுப்பினர்களுடனும் கலந்துரையாடுவோம்.
நாம் அன்று அனைவருக்கும் ஒன்று சேரவே அழைப்பு விடுத்தோம். யாரும் வரவில்லை, வந்தவர்களுடன் ஆட்சி அமைத்தோம். அவ்வாறே அவரது வேலைகளை முன்னெடுத்து செல்ல தேவையான அனைத்து உதவிகளையும் கட்சி என்ற வகையில் நாம் செய்தோம்.
எமது கட்சியானது தேர்தலை ஒத்திவைப்பதற்கு எதிர்ப்பினை தெரிவிக்கிறோம். கட்டாயம் தேர்தலானது அவசியம். அடுத்த தேர்தல் அரசியலமைப்பிற்கு உட்பட்ட வகையில் நடப்பது கட்டாயம். அதற்கான வேட்பாளர் தெரிவை நாம் கட்சி என்ற ரீதியில் முன்வைப்போம் என்றார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |