இந்திய ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியோம் - கொழும்பில் சத்தியாகிரகப் போராட்டம்
இந்திய ஏகாதிபத்தியத்திற்கு அடிபணியும் வகையில் கொண்டுவரப்படும் 22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை தோற்கடிக்க வேண்டும் என தெரிவித்து இன்று சத்தியாகிரகப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஒற்றையாட்சி தன்மையை பாதுகாக்கும் வகையில் கட்சி மற்றும் நிற வித்தியாசங்களை விடுத்து அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்குடன் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
தேசிய பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல்
“பிரிவினைவாத அரசியலமைப்பு சதியை தோற்கடிப்போம்” என்ற தொனிப்பொருளில் கொழும்பிலுள்ள சுதந்திர சதுக்கத்தில் பௌத்த பிக்குகள் உள்ளிட்ட தேசியவாதிகளின் சிறுபிரிவினர் இன்று சத்தியாகிரக போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் ஊடாக தேசிய பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)